அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்
Tag: Tamil
தமிழ் பழமொழிகள் – நாள் 6
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்
பொருள்: அடி எனப்படும் இறைவனின் திருவடியில் சரண் புகுபவர்களுக்கு, அந்த இறைவன் உதவுவது போல அவனின் சொந்த அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்பதே இதன் உண்மையான பொருளாகும்.
தமிழ் பழமொழிகள் – நாள் 5
கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போறானாம்
பொருள்: எவ்விடயத்திலும் சிறிய அளவிலான முயற்சி கூட செய்யாதவர் மிகப்பெரும் முயற்சியில் வெற்றியடைவேன் என்று கூறுவது சாத்தியப்படாத ஒன்று.
தமிழ் பழமொழிகள் – நாள் 4
கெட்டவனுக்கு உற்றார் கிளையிலும் இல்லை
பொருள்: தீய குணம் மற்றும் நடத்தை கொண்டவனின் சொந்தம் என அவனது உறவுகள் கூட கூறிக்கொள்ள மாட்டார்கள்.
தமிழ் பழமொழிகள் – நாள் 3
அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் ஆயிரம் கதிர் அரிவாள்
தமிழ் பழமொழிகள் – நாள் 2
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது
தமிழ் பழமொழிகள் – நாள் 1
கழுதைக்கு வாக்கப்பட்டு உதைக்கு அஞ்சலாமா?
Tamil – Friday
தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் யெய்தி – கொடுங்
கூற்றுக்கிரை எனப் பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல நானும் – இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ?
– மகாகவி சுப்பிரமணிய பாரதி.
Just A Thought
நீங்கள் நினைக்கும் போதெல்லாம்
உங்கள் தட்டுகளுக்குச் சோறு வரும் வரை
எங்களின் அருமையை நீங்கள் உணரப்போவதில்லை
நீங்கள் எங்களை உணரும் நேரம் வரும்போது
உங்கள் தட்டுகளில் சோறு இருக்காது
– தமிழ் பதிவுகள்
Just A Thought
“எந்த சூழ்நிலையையும் எதிர்த்து நிற்கலாம்
தன்னம்பிக்கையும் துணிச்சலும் இருந்தால்.”
– தமிழ் பதிவுகள்