தமிழ் பழமொழிகள் – நாள் 7

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்

பொருள்: அடி எனப்படும் இறைவனின் திருவடியில் சரண் புகுபவர்களுக்கு, அந்த இறைவன் உதவுவது போல அவனின் சொந்த அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்பதே இதன் உண்மையான பொருளாகும்.

தமிழ் பழமொழிகள் – நாள் 6

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்

பொருள்: அடி எனப்படும் இறைவனின் திருவடியில் சரண் புகுபவர்களுக்கு, அந்த இறைவன் உதவுவது போல அவனின் சொந்த அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்பதே இதன் உண்மையான பொருளாகும்.

தமிழ் பழமொழிகள் – நாள் 5

கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போறானாம்

பொருள்: எவ்விடயத்திலும் சிறிய அளவிலான முயற்சி கூட செய்யாதவர் மிகப்பெரும் முயற்சியில் வெற்றியடைவேன் என்று கூறுவது சாத்தியப்படாத ஒன்று.

தமிழ் பழமொழிகள் – நாள் 4

கெட்டவனுக்கு உற்றார் கிளையிலும் இல்லை

பொருள்: தீய குணம் மற்றும் நடத்தை கொண்டவனின் சொந்தம் என அவனது உறவுகள் கூட கூறிக்கொள்ள மாட்டார்கள்.

தமிழ் பழமொழிகள் – நாள் 3

அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் ஆயிரம் கதிர் அரிவாள்

பொருள்: ஒரு விடயத்தை பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் அதை தெரிந்தவர் போல் காட்டிக்கொள்பவர்களை குறிக்கிறது.

தமிழ் பழமொழிகள் – நாள் 2

உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது

பொருள்: தன்னிடம் இல்லாத ஒன்றை இருப்பது போல காட்டும் முயற்சி வீண்.

தமிழ் பழமொழிகள் – நாள் 1

கழுதைக்கு வாக்கப்பட்டு உதைக்கு அஞ்சலாமா?

பொருள்: ஒரு விடயத்தால் பயனில்லை எனத் தெரிந்த பின்பும் அதில் ஈடுபட்ட பிறகு பின்விளைவுகளுக்கு வருந்த கூடாது.